துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு
மத்திய ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது பயண வழியில் துர்க்மெனிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷீத் மெரிதோவை வியாழக்கிழமை
மத்திய ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது பயண வழியில் துர்க்மெனிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷீத் மெரிதோவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
மத்திய ஆசிய நாடுகளுடனான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணமாக சுஷ்மா ஸ்வராஜ், வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
கஜகஸ்தான் செல்லும் வழியில், துர்க்மெனிஸ்தானுக்கு அவர் சென்றார்.
அவரை, தலைநகர் அஸ்காபாத் விமான நிலையத்தில் துர்க்மெனிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷீத் மெரிதோவ் வரவேற்றார். பின்னர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்தத் தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது சுட்டுரைப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.