FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பொது நிகழ்ச்சிகளில் பிரதமர் அணியும் தலைப்பாகை: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சசி தரூர்

பிரதமர் நரேந்திர மோடி அணியும் தலைப்பாகை குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 1:09 am IST
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி அணியும் தலைப்பாகை குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இதுகுறித்து சசிதரூர் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போதும், உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கையிலும் அங்கிருக்கும் பல்வேறு வகையிலான நூதனமான தலைப்பாகைகளையும் பிரதமர் ஏன் அணிய வேண்டும்? அதேநேரத்தில் முஸ்லிம்களின் குல்லாவை மட்டும் ஏன் அணிய அவர் மறுக்கிறார்?
நாகா இனமக்கள், பழங்குடியின மக்களின் நூதனமான தலைப்பாகைகளை இறகுகளுடன் சேர்த்து அவர் அணிந்திருப்பதை பார்த்துள்ளோம். இதேபோல், பல்வேறு வகையிலான தலைப்பாகைகளை அவர் அணிந்திருப்பதையும் பார்த்துள்ளோம். இந்திரா காந்தியும் பல்வேறு வகையான உடைகளில் இருந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால், ஏன் அவர் (பிரதமர் மோடி) அந்த ஒன்றை (முஸ்லிம்களின் குல்லா) மட்டும் அணிய மறுக்கிறார் என்றார் சசிதரூர்.
முன்னதாக, மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும், நாட்டை ஹிந்து பாகிஸ்தானாக உருவாக்கும் பணியில் ஈடுபடும் என்று சசிதரூர் தெரிவித்திருந்தார். 
இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி அணியும் தலைப்பாகை குறித்து சசிதரூர் பேசியிருப்பதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்-பாஜக: சசிதரூரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில், நூதனமான தலைப்பாகைகள் என்று தெரிவித்து, வடகிழக்கு பிராந்திய மக்களையும், பழங்குடியின மக்களையும் அவமதிப்பு செய்ததற்காக காங்கிரஸ் கட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவும், சசிதரூர் வடகிழக்கு பிராந்திய மக்களை அவமதிப்பு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments