FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வளர்ச்சியின் பயன் ஏழைகளை சென்றடைய வேண்டும்: வெங்கய்ய நாயுடு

வளர்ச்சியின் பயன் ஏழைகளை சென்றடைய வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

வளர்ச்சியின் பயன் ஏழைகளை சென்றடைய வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 76-ஆம் ஆண்டு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். இதற்கு அடுத்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு விடுதலை அடைந்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 76-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாநிலங்களவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள் யாவும் இந்தியாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்வதற்காக கைகோத்து செயல்படுவதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது என்றார். அவர் மேலும் பேசியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் நோக்கங்களை வென்றெடுத்தது. தற்போது, மக்களின் துன்பங்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனில் நாமெல்லாம் கைகோத்து செயல்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.
உலகின் ஆறாவது பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதே சமயம், வளர்ச்சியின் பலன்கள் சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
விடுதலைக்கு பின்னர் நாடு நெடுந்தூரம் பயணித்து வந்திருக்கிறது. பல சாதனைகளையும் புரிந்திருக்கிறது. அந்த சாதனைகளுக்கு மத்தியில் நாம் தோல்விகளையும் சந்தித்திருக்கிறோம். நாட்டை பெருமளவில் பாதிக்கும் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை நாம் சந்தித்து வருகிறோம். இந்த சவால்களை முறியடிப்பதற்கு திடமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments