FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கால்நடை திருடியதாக சந்தேகம்: உ.பி.யில் இளைஞர் அடித்துக் கொலை

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தின் போலாபூர் ஹதோலியா கிராமத்தில்  கால்நடை திருடியதாக சந்தேகப்பட்டு, உள்ளூர்வாசிகள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தின் போலாபூர் ஹதோலியா கிராமத்தில்  கால்நடை திருடியதாக சந்தேகப்பட்டு, உள்ளூர்வாசிகள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அபிநந்தன் சிங் கூறியதாவது:
துபை நாட்டில் தையல் பணிபுரியும் ஷாரூக்(20), விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார். அவரும், அவரது நண்பர்கள் மூவரும், புதன்கிழமை இரவு வெளியில் சென்றனர். இவர்களை பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர், கால்நடை திருடர்கள் என்று சந்தேகப்பட்டு அவர்களைத் தாக்கினர். 
இந்த சம்பவத்தில் ஷாரூக்குடன் வந்த மற்ற மூவரும் தப்பி ஓடி விட்டனர். மக்கள் அடித்ததில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
பிரேத பரிசோதனையில், அவர் இறப்புக்கு காரணம், கடுமையாக தாக்கியது தான் என்று தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments