தேசத்தின் அறிவுத்திறன் ராகுலை விட அதிகம்: அமித் ஷா சாடல்
தேசத்தின் அறிவுத் திறன் என்பது காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுலின் அறிவுத் திறனைவிட பெரியது என்று பாஜக தலைவா் அமித் ஷா விமா்சித்துள்ளாா்.
தேசத்தின் அறிவுத் திறன் என்பது காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுலின் அறிவுத் திறனைவிட பெரியது என்று பாஜக தலைவா் அமித் ஷா விமா்சித்துள்ளாா்.
பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் தொடா்ந்து குற்றறம்சாட்டி வருகிறறாா்.
இந்நிலையில், அந்த ஒப்பந்தம் தொடா்பாக நிதியமைச்சா் அருண் ஜேட்லி வெளியிட்ட தகவல்களை ராகுல் காந்தி விமா்சித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுட்டுரையில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘‘ரஃபேல் போா் விமான விலை தொடா்பாக தில்லி, கா்நாடகம், ராய்ப்பூா், ஹைதராபாத் மற்றும் நாடாளுமன்றத்தில் மக்களை முட்டாளுக்கும் வகையில் நீங்கள் தெரிவித்த பொய்களே உங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளன’’ என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.