காஷ்மீர் இளைஞர்கள் நல்வழிக்கு மாற ராணுவம் அளித்திருக்கும் பொன்னான வாய்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தவறான வழியில் சென்று பயங்கரவாத இயக்கங்களில் இணைந்தவர்கள், மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப இந்திய ராணுவம் பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தவறான வழியில் சென்று பயங்கரவாத இயக்கங்களில் இணைந்தவர்கள், மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப இந்திய ராணுவம் பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.
காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் அவ்வப்போது துப்பாக்கிச் சண்டை நடந்து வரும் நிலையில், பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், காஷ்மீர் மாநிலத்தின் கிராமங்களில் வசிக்கும் தங்களது பெற்றோரைப் பார்க்க சத்தமில்லாமல் வந்து செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையில் வழி தவறிச் சென்ற இளைஞர்கள், மனம் திருந்தி இயல்பான வாழ்க்கை வாழ நல் வாய்ப்பை வழங்க இந்திய ராணுவம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து, தங்களை சந்திக்க வரும் பிள்ளைகளிடம், மனம் திருந்தி வாழுமாறு அன்போடு வேண்டுகோள் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என்றால் தொடரலாம், பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கு முன்பு எப்படி இருந்தார்களோ அப்படியே வாழலாம் என்று இந்திய ராணுவம் பெற்றோருக்கு உறுதி அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமத் தலைவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும், வழி தவறி பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த இளைஞர்களை, காடுகளில் இருந்து கிராமத்துக்கு திரும்புமாறும், இந்திய ராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உயிரை இழக்கும் முன், திரும்பி வந்து குடும்பத்தில் இணைந்து, இயல்பான வாழ்க்கையை வாழுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் புனிதமான ரமலான் மாதத்தில், ஏராளமான இளைஞர்கள் தங்களது குடும்பத்தினரைப் பார்க்க வரும் நிலையில், இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.