FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு ஆலோசனைகள் தேவை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறு உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

Updated On : 27 ஜூன் 2018, 1:36 am IST
பகிர்:

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறு உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் அவர் சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான செயல் திட்டங்களை வகுக்குமாறு ஏற்கெனவே உயர் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றம் நியமித்த குழு அந்தச் செயல் திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதன்மூலம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு பிறக்கும். நீண்ட கால வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிப்பதில், அந்தக் குழு அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் அந்தக் குழு கூடி இதுதொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். இதன்மூலம், வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நமது இலக்கை எட்டிவிடலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சுற்றறிக்கையில், மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தீபக் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீபக் மிஸ்ரா, மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் ஒடிஸா அரசு தோல்வி அடைந்துவிட்டது' என்று குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments