FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுரீந்தர் சிங்லா காலமானார்

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சருமான சுரீந்தர் சிங்லா (78), மூச்சுத் திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.

Updated On : 29 ஜூன் 2018, 1:04 am IST
பகிர்:

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சருமான சுரீந்தர் சிங்லா (78), மூச்சுத் திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
அவர் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுடன் இருந்து வந்த சுரீந்தர், கடந்த மாதம் நிமோனியா காய்ச்சல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து கடந்த 15 நாள்களுக்கு முன்பு வீடு திரும்பிய போதும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சுரீந்தருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி 6 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சுரீந்தர், பதின்டா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்ததுடன், அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார். பாட்டியாலா மாவட்டத்தின் சமானா நகரத்தைச் சேர்ந்த சுரீந்தர், தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவரது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
சுரீந்தர் சிங்லாவின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments