FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருநங்கையருக்கு பான் கார்டு நடைமுறையை எளிதாக்கியது வருமான வரித் துறை

திருநங்கையர் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் பாலின அடையாளத்தை உறுதி செய்யும் அடையாள ஆவணம் தேவையில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

திருநங்கையர் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் பாலின அடையாளத்தை உறுதி செய்யும் அடையாள ஆவணம் தேவையில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
இதற்காக கடந்த மாதம் வருமான வரித் துறை தனது விதிகளில் திருத்தம் மேற்கொண்டது. இப்போது, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போதுவரை, பான் கார்டு விண்ணப்பத்தில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இனி மூன்றாவது பாலினத்துக்கான இடமும் அளிக்கப்படும். 
விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினமாக குறிப்பிடுபவர்கள், அதற்காக வேறு ஆவணம் எதையும் தாக்கல் செய்ய வேண்டாம். இதன் மூலம் திருநங்கையர் எளிதாக பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஆண், பெண் என்ற பாலினத்தில் பான் கார்டு பெற்றவர்கள், அதில் திருநங்கை என மாற்றம் செய்யவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆதார் அட்டையில் மூன்றாவது பாலினத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. திருநங்கை என்ற பெயரில் ஆதார் அட்டை பெற்றவர்கள், அதனை பான் கார்டுடன் இணைக்க முயற்சித்தபோது பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்தே, பான் கார்டிலும் மூன்றாவது பாலினத்தைச் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் இப்போது 33 கோடிக்கு மேல் பான் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் சுமார் 16.65 கோடி பேர் தங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments