FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கிராம சுயாட்சி இயக்கம் வெற்றி: மோடி பெருமிதம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு, கிராம சுயாட்சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Updated On : 25 மே 2018, 12:38 am IST
கர்நாடக
பகிர்:

பாஜக தலைமையிலான மத்திய அரசு, கிராம சுயாட்சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று சனிக்கிழமையுடன் (மே 26) நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு தங்கள் ஆட்சியில் கிராம சுயாட்சி இயக்கம் மூலம் ஏற்படுத்திய சாதனைகளை மோடி சுட்டுரையில் (டுவிட்டர்) தொடர்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
"கிராம சுயாட்சி இயக்கத்தின் மூலம் கிராம மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் மத்திய அரசின் 7 முக்கியத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14 முதல் மே 5 ஆம் தேதி வரை அப்பேத்கரை நினைவுகூர்ந்து தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 16,850 கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.
7.53 லட்சம் குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டத்தின்கீழ் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 5.02 லட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு அளித்துள்ளோம். 16,682 கிராமங்களில் உள்ள 25.03 லட்சம் பேருக்கு 
எல்இடி மின்சார விளக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. 1,64,398 குழந்தைகளுக்கும், 5,02,434 பெண்களுக்கும் பல்வேறு நோய்த் தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஜன்தன் திட்டத்தின் கீழ் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 
16.14 லட்சம் பேருக்கு காப்பீடு வசதியும், 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விபத்துக் காப்பீடும் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம்தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் மோடி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments