FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலைகளை திருப்பி ஒப்படைத்தது அமெரிக்கா

இந்தியாவில் இருந்து திருடப்பட்டு, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் டாலர் மதிப்புள்ள 2 பழமையான சிலைகளை அந்நாட்டு அரசு திருப்பி ஒப்படைத்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


இந்தியாவில் இருந்து திருடப்பட்டு, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் டாலர் மதிப்புள்ள 2 பழமையான சிலைகளை அந்நாட்டு அரசு திருப்பி ஒப்படைத்துள்ளது.
சிவபெருமானை சித்திரிக்கும் கிரானைட் கல்லால் செதுக்கப்பட்ட லிங்கோத்பவமூர்த்தி சிலை, தமிழகத்தில் இருந்து திருடப்பட்டது. சோழர் காலத்துக்கு முந்தைய அந்தச் சிலையின் தற்போதைய மதிப்பு 2.25 லட்சம் டாலராகும். அந்தச் சிலை, அலபாமாவில் உள்ள பர்மிங்ஹாம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல், போதி சத்துவரை சித்திரிக்கும் பளிங்கு சிற்பம், பிகாரில் உள்ள புத்தகயை கோயில் அருகில் உள்ள ஒரு கோயிலில் இருந்து 1980-களின் இறுதியில் திருடப்பட்டது. அந்தச் சிலை, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆக்லாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையின் தற்போதைய மதிப்பு 2.75 லட்சம் டாலராகும்.
இந்த இரு சிலைகளும் இந்தியாவில் இருந்து திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் தரப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் உடைமைகளை திருப்பி ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த இரு சிலைகளையும் இந்தியத் தூதர் சந்தீப் சக்கரவர்த்தியிடம் மன்ஹாட்டான் மாகாண அட்டர்னி சைரஸ் வேன்ஸ் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் சைரஸ் வேன்ஸ் பேசியதாவது:
பணத்துக்காக உலக பாரம்பரிய உடைமைகளை கொள்ளையடிப்பது துயரம் அளிக்கும் விஷயமாகும். திருடப்பட்ட சிலைகளை வாங்குவது குற்றமாகும். எனவே, இந்த இரு சிலைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் எனது அலுவலகம் உறுதிபூண்டுள்ளது. அதன்படி, உரிமையாளர்களிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இதையடுத்து, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த இரு சிலைகளையும் மீட்டு இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட சைரஸ் வேன்ஸ் குழுவினருக்கு சந்தீப் சக்கரவர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments