FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீரவ் மோடியின் உதவியாளருக்கு எதிராக சர்வதேச பிடியாணை

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் தொடர்புடைய தொழிலதிபர் நீரவ் மோடியின் உதவியாளர் மிஹிர் ஆர்.பன்சாலிக்கு எதிராக சர்வதேச ரெட் கார்னர் (பிடியாணை) நோட்டீஸை, பன்னாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் தொடர்புடைய தொழிலதிபர் நீரவ் மோடியின் உதவியாளர் மிஹிர் ஆர்.பன்சாலிக்கு எதிராக சர்வதேச ரெட் கார்னர் (பிடியாணை) நோட்டீஸை, பன்னாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் ஃபையர் ஸ்டார்' நகைக்கடை நிறுவனத்துக்காக ரூ.13,000 கோடி கடனை முறைகேடான வழிகளில் பெற்று அதனை திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. 
இதைத்தொடர்ந்து, நீரவ் மோடியும், முறைகேட்டில் தொடர்புடையவராக கருதப்படும் அவரது உறவினர் மெஹூல் ஜோக்ஸியும் கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பியோடினர். அதன் பிறகு அவர்களை கண்டறிய இயலவில்லை.
இதனால், நீரவ் மோடிக்கு எதிராக சர்வதேச காவல்துறை சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான மிஹிர் ஆர்.பன்சாலிக்கு எதிராக அதேபோன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் தில்லியில் கூறியதாவது:
இந்தியாவில் நடைபெறும் நிதி முறைகேட்டு வழக்கு விசாரணைக்காக பன்சாலி தேவைப்படுகிறார் என்று ரெட் கார்னர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
விசாரணை நடவடிக்கைகளை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல இது அவசியமானதாகும்.
பன்சாலியை தங்கள் நாடுகளில் கண்டறிந்தால் அவரை கைது செய்ய வேண்டும் அல்லது தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என சர்வதேச காவல்துறையை கொண்டுள்ள 192 உறுப்பு நாடுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அமெரிக்கா, பிரிட்டன், ஹாங் காங், சீனா அல்லது ஐக்கிய அரபு நாடுகளுக்கு பன்சாலி தப்பிச் சென்றிருக்கலாம் என சர்வதேச காவல்துறை கருதுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃபையர் ஸ்டார் நிறுவனத்தின் அயலுறவு நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரி என்ற வகையில், பன்சாலி அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்றொரு சந்தேகமும் நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments