FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முழு அடைப்பு போராட்டம்: உ.பி.யில் 6 காவலர்கள் காயம்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தின்போது உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறையில்

30 ஜனவரி 2024, 10:12 pm IST
எஸ்சி, எஸ்டி சட்டத் திருத்தத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ரயில் மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பிய இதர சமூக அமைப்பினர்.
பகிர்:


எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தின்போது உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறையில் 6 காவலர்கள் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், அந்த சட்டம் நீர்த்து போய் விட்டதாக தலித் அமைப்புகள் குற்றம்சாட்டின. இதைத் தொடர்ந்து, அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள், நாடு முழுவதும் போராட்டம் நடத்த வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்தன.
இதன்படி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் பங்கி ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலை போரட்டக்காரர்கள் இடைமறித்தனர். தகவலறிந்து ரயில்வே பாதுகாப்புப் படை வந்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
உத்தரப் பிரதேச எம்எல்ஏ சுரேந்திர சிங், இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், உயர் ஜாதியினரால்தான் நான் தேர்தலில் வென்றேன். அவர்களுக்காக நான் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அவர்கள் கேட்டால், எனது பதவியையும் ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன்' என்றார்.
ஆக்ராவிலும் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாராணசி, கோரக்பூர் ஆகிய நகரங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், பீந்த், சிவ்புரி, குவாலியர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை விடப்பட்டது. மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகியவையும் மூடப்பட்டிருந்தன.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை அந்த மாநில அரசு அமல்படுத்தியிருந்தது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் வன்முறை சம்பவங்கள் எதுவும் இல்லாமல் போராட்டம் அமைதியாக நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்தது. அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பிகாரின் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு போதிய ஆதரவு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments