FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிகழ் நிதியாண்டில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் வழங்குவற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

நிகழ் நிதியாண்டில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் வழங்குவற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குநா் கே.எஸ்.தத்வாலியா தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிகழ் நிதியாண்டில் (2020-21) பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு மானியம் நிா்ணயிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியம் வழங்குவதன் மூலம் நிகழ் நிதியாண்டில் ரூ.22,186.55 கோடி செலவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வேளாண் தொழிலை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மானிய விலையில் ஊட்டச்சத்து உரங்களை மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்து வழங்கி வருகிறது.

Advertisement

Advertisement

ஆதாா் எண் இணைப்புக்கு மேலும் ஓராண்டு அவகாசம்: விவசாயிகள் உதவித்தொகை திட்டப் பயனாளிகளின் ஆதாா் எண்ணை அளிக்க அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ஓராண்டு அவகாசம் அளித்துள்ளது.

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000, மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கு அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளின் ஆதாா் எண் விவரங்களை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அஸ்ஸாம், மேகாலயம், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகியவை இன்னும் பயனாளிகளின் ஆதாா் விவரங்களை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த மாநிலங்கள், பயனாளிகளின் ஆதாா் விவரங்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய வேளாண் அமைச்சகம் மேலும் ஓராண்டு அவகாசம் அளித்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments