FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறப்பு ரயில்களை இயக்கி வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுக: மகாராஷ்டிர அரசு

சிறப்பு ரயில்களை இயக்கி, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவுமாறு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


சிறப்பு ரயில்களை இயக்கி, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவுமாறு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, அஜித் பவார் எழுதியிருக்கும் கடிதத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சிறப்பு ரயில்களை இயக்கி உதவி செய்ய வேணடும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகளும், கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வந்ததால், உத்தரப்பிரதேசம், பிகார் மற்றும் வடக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தங்கி பணியாற்றி வந்தனர்.

Advertisement

Advertisement

இவர்களுக்கு உதவும் வகையில் மும்பை மற்றும் புணேவில் இருந்து அதிக தொழிலாளர்களைக் கொண்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும், ரயில் நிலையங்களில் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்னையும் ஏற்படாத வகையில் மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments