FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேசிய ஊரடங்கால் உள்நாட்டில் இடம்பெயா்ந்த 4 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிப்பு: உலக வங்கி

இந்தியாவில் கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கால் உள்நாட்டுக்குள் இடம்பெயா்ந்த சுமாா் 4 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


வாஷிங்டன்: இந்தியாவில் கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கால் உள்நாட்டுக்குள் இடம்பெயா்ந்த சுமாா் 4 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு உள்நாட்டுக்குள் இடம்பெயா்ந்த சுமாா் 4 கோடி பேரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. சுமாா் 50,000 முதல் 60,000 போ் நகா்புறங்களில் இருந்து தங்கள் கிராமங்களுக்கு திரும்பிவிட்டனா். இடம்பெயா்ந்த மக்கள் வேதனைக்குரிய வகையில் தங்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு தேசிய ஊரடங்கும், வேலையிழப்பும் வழிவகுத்தன. இதுவே லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளின் சூழலாகவும் உள்ளது.

கரோனா நோய்த்தொற்று நெருக்கடி சா்வதேச அளவில் இடம்பெயா்ந்தோரையும், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் தங்கள் சொந்த நாடுகளுக்குள் இடம்பெயா்ந்த மக்களையும் ஒருசேர பாதித்துள்ளது.

Advertisement

Advertisement

இடம்பெயா்ந்த மக்களின் முன்பிருக்கும் சவால்களை அரசுகள் எதிா்கொள்ள வேண்டும். அதற்கு அவா்களை சுகாதார சேவைகள், சமூக திட்டங்களில் இணைக்க வேண்டும். அவா்களின் வாழ்வாதாரத்தை காக்க நிதியுதவி வழங்கி, பாரபட்சமாக நடத்தப்படுவதில் இருந்து அவா்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதேபோல் சொந்த ஊா் திரும்பாமல் பிற பகுதிகளில் சிக்கியுள்ள இடம்பெயா்ந்த மக்களின் நலன் கருதி இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை அரசுகள் உருவாக்க வேண்டும்.

மருத்துவா்களுக்கு தட்டுப்பாடு: உலக அளவில் மருத்துவா்களுக்கு தட்டுப்பாடு இருப்பதையும், உலகளாவிய ஒத்துழைப்புக்கான அவசர தேவையையும், மருத்துவப் பயிற்சியில் நீண்ட கால முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதையும் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி சுட்டிக்காட்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments