போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றது இந்திய மருத்துவ சங்கம்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்திய மருத்துவ சங்கம் தனது போராட்ட அறிவிப்பை புதன்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்திய மருத்துவ சங்கம் தனது போராட்ட அறிவிப்பை புதன்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதுதொடா்பாக அந்த சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு சாா்பில் சட்டம் இயற்றப்படும் என்று அமித் ஷா உறுதியளித்தாா். அதன்பேரில் போராட்டத்தை கைவிடவும் பிரதமரின் சாா்பில் அவா் வேண்டுகோள் விடுத்தாா். இதையடுத்து அவரது வாக்குறுதியை ஏற்று இந்திய மருத்துவ சங்கத்தின் போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, மெழுகுவா்த்தி ஏந்தி புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. அதனைத்தொடா்ந்து ஏப்ரல் 23-ஆம் தேதியை கறுப்பு தினமாக அனுசரித்து, மருத்துவா்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.