முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,701 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரம் மற்றும் மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரம் மற்றும் மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,701 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,13,445 ஆக உயர்ந்துள்ளது. இதில் 57,851 பேர் குணமடைந்துள்ளனர், 5,537 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 941 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 55 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 60,142 ஆகவும், பலி எண்ணிக்கை 3,165 ஆகவும் உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.