அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி ட்வீட்
அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ஒப்பீட்டு வரைபடத்தை பதிவிட்டுள்ளார். அது, நாட்டில் கரோனா உயிரிழப்புக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இடையேயான வரைபடம். அதாவது, பொதுமுடக்க காலத்தில் கரோனா உயிரிழப்பு அதிகரிக்க, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
இந்த வரைபடத்துடன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.