FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசம் : டெங்குவால் 32 சிறார்கள் உட்பட 40 பேர் பலி

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக- 24 ஆம் தேதி  அடையாளம்  தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகிருந்தார்கள்.

Updated On : 31 ஆகஸ்ட் 2021, 12:48 pm IST
உத்தரப் பிரதேசம் : டெங்குவால் 32 சிறார்கள் உட்பட 40 பேர் பலி
பகிர்:

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டதில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 சிறார்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி செய்தார்.

முன்னதாக மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக- 24 ஆம் தேதி  அடையாளம்  தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியிருந்தார்கள். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால். டெங்கு காய்ச்சல் என்றே மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

பின் மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதிகளில்  மர்ம காய்ச்சலால் 80 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 சிறார்கள் உட்பட 40 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபர்களும் அதிகரித்து இருப்பதால் தனி பிரிவை ஒன்றை ஏற்படுத்தி மாவட்ட மருத்துவமனை அவர்களுக்கு தீவிர சிகிச்சையை அளித்து வருகிறது.

கடுமையாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ந்து பெய்த கனமழையும் அதனால் உருவான சுகாதார சீரழிவுமே காரணம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments