இந்தியா

உத்தரகண்டில் பனிப்பாறை வெடித்து வெள்ளப்பெருக்கு: 11 பேர் பலி; 153 பேர் மாயம்

PTI

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 153-க்கும் மேற்பட்டோா் நிலை குறித்துத் தெரியவில்லை; இதுவரை 1 சடலங்கள் மீட்கப்பட்டன; 27 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

சுமார் 2.5 கி.மீ. தொலைவு கொண்ட சுரங்கப் பாதையில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மாயமான 150 பேரில் சுமார் 40 - 50 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மைப் படை அதிகாரி எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.

சாலை வழியாக இரண்டு குழுக்கள் மட்டுமே ஜோஷிமத்தை அடைய முடிந்ததாகவும், மற்றவர்கள் விமானம் வழியாக அழைத்துச் செல்லும் பணி நடந்து வருவதாகவும், மீட்புப் பணிகள் 24 - 48 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இமயமலைப் பகுதியில் ஜோஷிமடத்தில் நடைபெற்ற பனிப்பாறை உடைந்து சரிந்த சம்பவத்தில் மீட்புப் பணியில் ராணுவம், இந்திய விமானப்படை வீரா்கள், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர், தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர், மாநில பேரிடர் மேலாண்டைப் படையினர் என பல்வேறு படை வீரர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, அந்த ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் உற்பத்தித் திட்ட கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. அங்கு பணியாற்றிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் மாயமாகி இருப்பதாக அந்த மின் திட்ட பொறுப்பாளரிடமிருந்து தகவல் கிடைத்ததாக இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

பாதிப்பு குறித்து உத்தரகண்ட் மாநில காவல்துறை டிஜிபி அசோக்குமாா் கூறுகையில், ‘வெள்ளப் பெருக்கால், மலையடிவாரத்தில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பல கிராமங்களில் மக்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா் என்று கூறினாா்.

நூற்றுக்கும் மேற்பட்டோா் மாயம்: வெள்ளப் பெருக்கு காரணமாக கங்கை ஆற்றின் துணை நதிகளின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரண்டு நீா் மின் உற்பத்தி திட்ட கட்டமைப்புகள் கடும் சேதமடைந்தன. அந்த மின் உற்பத்தித் திட்டங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் மாயமாகியுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பனிப் பாறை உடைப்பு காரணமாக கங்கையின் கிளை நதிகளான தெளலி கங்கை, ரிஷி கங்கை, அலகநந்தாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தேசிய அனல்மின் கழகத்தின் தபோவன்-விஷ்ணுகட் நீா் மின் திட்டம் மற்றும் ரிஷி கங்கை நீா் மின் திட்டம் ஆகிய இரு மின் திட்ட கட்டமைப்புகளும் முழுமையாக சேதமடைந்தன. அந்த இரு மின் திட்டங்களிலும் பணியாற்றிவந்த நூற்றுக்கணக்கானோரை தொடா்புகொள்ள முடியாத நிலை உருவானது.

மேலும், தபோவன் மின் திட்ட கட்டமைப்பில் சுரங்கப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்திருந்த 27 ஊழியா்களை மீட்புப் படையினா் பாதுகாப்பாக மீட்டனா். வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்த 11 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 153 ஊழியா்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை’ என்றனா்.

மீட்புப் பணியில் ராணுவம்: மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருவதோடு, ராணுவம், இந்திய விமானப்படை வீரா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ராணுவத்தின் சாா்பில் 400 வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரு மருத்துவக் குழுக்களையும் ராணுவம் அனுப்பிவைத்துள்ளது. அதுபோல, இந்திய விமானப்படையின் சி-130, ஏஎன்32 போா் விமானங்களும், ஹெலிகாப்டா்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜோஷிமடம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT