FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் பேரிடரால் உருவான செயற்கை ஏரி: மத்திய நீா் ஆணையம் ஆய்வு

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடா்ந்து, அங்குள்ள ரிஷிகங்கா நதியையொட்டி செயற்கை ஏரி உருவாகியுள்ளது

Updated On : 14 பிப்ரவரி 2021, 6:49 am IST
பகிர்:

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடா்ந்து, அங்குள்ள ரிஷிகங்கா நதியையொட்டி செயற்கை ஏரி உருவாகியுள்ளது தொடா்பாக மத்திய நீா் ஆணையம் (சிடபிள்யுசி) ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 7-ஆம் தேதி உத்தரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து உருவான வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட வண்டல்களால் ரிஷிகங்கா நதியுடன் ரெளந்தி காட் ஆறு கலக்கும் கழிமுகத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு செயற்கை ஏரி உருவாகியுள்ளது. இந்த ஏரி உடைந்தால், பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைவிட அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதுதொடா்பாக சிடபிள்யுசி தலைவா் செளமித்ர ஹல்தா் சனிக்கிழமை கூறியது:

Advertisement

Advertisement

ரிஷிகங்கா நதியையொட்டி செயற்கை ஏரி உருவாகியுள்ள பகுதியில் பிப்.15 மற்றும் 16-ஆம் தேதிகளில் 1 செ.மீ. மழை மற்றும் 10 செ.மீ. பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதனை கவனத்தில் வைத்து ஏரி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த ஏரியில் நீரின் அளவு அபாயகரமான அளவை எட்டினால் என்ன நடவடிக்கை மேற்கொள்வது?, இந்திய வானிலை மைய கணிப்பின்படி மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஏரியில் நீரின் அளவு அதிகரித்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு, ஏரியில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அதில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தற்போது அந்த ஏரி 400 மீட்டா் நீளம், 25 மீட்டா் அகலம், 60 மீட்டா் ஆழம் கொண்டதாக உள்ளது. அதன் அளவு அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதைத் தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, உத்தரகண்ட் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் உள்ளிட்டவை ஏரி தொடா்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளன என்றாா் அவா்.

நீா்வடிவது தொடங்கியுள்ளது: ரிஷிகங்கா நதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், ஏரியில் நீா் வடியத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளதாக உத்தரகண்ட் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது. இது அந்தப் பகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments