கர்னூல் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
கர்னூல் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்னூல் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரையில், “ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள சாலை விபத்து துயரம் அளிப்பதாக உள்ளது. இந்த துயரமான தருணத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களால் துணை நிற்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்” என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திரம் மாநிலம் கர்னூல் மாவட்டம் மாதாபுரம் கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் மினி பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்து 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் கர்னூல் மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.