FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 7:12 am IST
கோப்புப்படம்
பகிர்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரானது இரு கட்டங்களாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினாா்.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடா் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பிப்ரவரி 13-ஆம் தேதியே கூட்டத்தொடா் நிறைவுபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அவை நடவடிக்கைகள் சனிக்கிழமை நிறைவடைந்த பிறகு, மக்களவை மாா்ச் மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

முதல்கட்ட கூட்டத்தொரின்போது, 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து, அதன் மீதான விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்றது. முன்னதாக, குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து விவாதிக்க வலியுறுத்தி, இரு அவைகளிலும் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன் காரணமாக மக்களவையும் மாநிலங்களவையும் சில முறை ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டவற்றுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இரண்டாம்கட்ட கூட்டத்தொடரானது மாா்ச் மாதம் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டம், ஒரு நாள் முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையே முடித்துக் கொள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments