முகப்பு
இந்தியா

அசாம் அரசின் உத்தரவு..மிசோரம் முதல்வரின் பதில்

மிசோரமுக்கு செல்ல வேண்டாம் என அசாம் அரசு அறிவுறுத்திய நிலையில், வட கிழக்கு இந்தியா ஒன்றாகவே இருக்கும் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூலை 2021, 3:57 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மிசோரமுக்கு செல்ல வேண்டாம் என அசாம் அரசு அறிவுறுத்திய நிலையில், வட கிழக்கு இந்தியா ஒன்றாகவே இருக்கும் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையேயான எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவிவரும் நிலையில், வட கிழக்கு இந்தியா ஒன்றாகவே இருக்கும் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

இரு மாநில காவலர்களுக்கிடையே எல்லை பிரச்னை தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து, மிசோரம் மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என அசாம் மக்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அசாம் அரசின் அரசாணையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சோரம்தங்கா வட கிழக்கு இந்தியா ஒன்றாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மிசோரம் எல்லை கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் அசாம் எல்லை கிராம மக்களுக்கு இடையே நடந்த மோதலில் அசாம் காவலர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக மாநில உள்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அசாம் - மிசோரம் மாநில எல்லைப் பகுதியான பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அசாம் மாநிலத்தின் காச்சர், கரிம்ஜங், ஹைலகண்டி ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது

பணி மற்றும் இதர நிமித்தங்களுக்காக மிசோரம் மாநிலத்தில் வசித்துவரும் அசாம் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments