‘பாவத்தைப் போக்க மொட்டையடித்துக் கொண்டேன்’: திரிணமூல் கட்சியில் இணைந்த பாஜக எம்எல்ஏ
திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷிஷ் தாஸ் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா‘பாவத்தைப் போக்க மொட்டையடித்துக் கொண்டேன்’: திரிணமூல் கட்சியில் இணைந்த பாஜக எம்எல்ஏ
திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷிஷ் தாஸ் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷிஷ் தாஸ் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு பாஜக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரிணமூல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான ஆஷிஷ் தாஸ் திரிணமூல் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார்.
முன்னதாக பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ஆஷிஷ் தாஸ் தனது பாவத்திற்கு பிராயசித்தம் தேடும் விதமாக மொட்டையடித்துக் கொண்டார். திரிணமூல் கட்சியில் சேர்வதற்கு முன்பாக தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள மொட்டையடித்துக் கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.