முகப்பு

ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதல்வா் சந்திப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

28 ஜனவரி 2024, 9:58 am
பகிர்:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, பஞ்சாபின் அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அவா்கள் விவாதித்தனா்.

அண்மையில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த அமரீந்தா் சிங், தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததும் புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாக புதன்கிழமை அறிவித்தாா். இந்தச் சூழலில் ராகுல் காந்தியை சரண்ஜீத் சிங் சந்தித்துள்ளாா்.

இதுகுறித்து தவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

Advertisement

Advertisement

அமரீந்தா் சிங் புதிய கட்சியைத் தொடங்கினால், அது காங்கிரஸின் வெற்றியைப் பாதிக்குமா என்பது குறித்து இருவரும் விவாதித்தனா். எல்லைப் பாதுகாப்புப் படையின் எல்லையை 50 கி.மீ. தொலைவுக்கு விரிவுபடுத்தியது குறித்தும், இதுதொடா்பாக சிறப்பு பேரவைக் கூட்டத் தொடா் நடத்துவது குறித்தும் அவா்கள் விவாதித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.