ஷில்லாங் - இம்பால் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
மணிப்பூர், மேகலயா மாநிலங்களுக்கிடையே உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மணிப்பூர், மேகலயா மாநிலங்களுக்கிடையே உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மணிப்பூர், மேகலயா மாநிலங்களின் தலைநகரங்களான இம்பால், ஷில்லாங் இடையே ஆர்சிஎஸ் - உதான் திட்டத்தின் கீழ் இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வட கிழக்கு இந்தியாவை விமான சேவை மூலம் இணைக்கும் இந்திய அரசின் நோக்கம் இந்த பாதையில் விமானங்களை இயக்கியதன் மூலம் நிறைவேறியுள்ளது.
Advertisement
Advertisement
இம்பால், ஷில்லாங் நகரங்களுக்கிடையே மக்கள் இனி எளிதாக பயணிக்கலாம். விமானத்தில் பயணம் செய்வதன் மூலம் இம்பாலிலிருந்து ஷில்லாங் செல்ல 60 நிமிடங்களும் ஷில்லாங்கிலிருந்து இம்பால் செல்ல 75 நிமிடங்களாகும். முன்னதாக, ஒரு நாளுக்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
உதான் திட்டத்தின் கீழ் 361 புதிய வழிகளும் 59 விமான நிலையங்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த இரு மாநிலங்களின் தலைநகருக்கிடையே விமான சேவை தொடங்க மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். உதான் திட்டத்தின் கீழ் இம்பாலுடன் இரண்டு நகரங்கள் விமான சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.