இந்தியா

சீனாவில் அதிகரிக்கும் கரோனா பரவல்: மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் 

சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

DIN

சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஜப்பான், தென் கொரியா, பிரேசில், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் ஆயுஷ், சுகாதாரத் துறை, மருந்துத் துறை, உயிரித் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைசார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பால் உள்பட மருத்துவத் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT