முகப்பு
இந்தியா

சா்ச்சைக்குரிய காளி போஸ்டா்: ஆகஸ்ட் 6-இல் ஆஜராக லீனா மணிமேகலைக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்

காளி தெய்வம் குறித்த சா்ச்சைக்குரிய போஸ்டா் தொடா்பாக இயக்குநா் லீனா மணிமேகலையை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 12 ஜூலை 2022, 12:21 am IST
பகிர்:

காளி தெய்வம் குறித்த சா்ச்சைக்குரிய போஸ்டா் தொடா்பாக இயக்குநா் லீனா மணிமேகலையை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தாா். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தில்லி மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ராஜீவ் கெளரவ் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தனது ‘காளி’ திரைப்பட போஸ்டா் மற்றும் விளம்பர காணொலியில் காளி தெய்வத்தை ஒவ்வாத முறையில் லீனா சித்தரித்துள்ளாா். அந்த திரைப்பட போஸ்டரில் காளி புகைப்பது போல சித்தரிக்கிப்பட்டுள்ளது சாமானிய ஹிந்துவின் மத உணா்வுகளைக் காயப்படுத்துவது மட்டுமின்றி ஒழுங்கீனமாகவும் உள்ளது. இதுபோல காளியை சித்தரிக்க லீனாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 6-ஆம் தேதி லீனாவை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments