முகப்பு
இந்தியா

எங்கே செல்லும் இந்தப் பாதை? 14 வயது சிறுவனைக் கொன்ற 7 வயது சிறுவன்??

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், 14 வயது சிறுவன் மீது டீசலை ஊற்றி தீவைத்துக் கொலை செய்ததாக 7 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூன், 2022 at 4:27 PM
எங்கே செல்லும் இந்தப் பாதை? 14 வயது சிறுவனைக் கொன்ற 7 வயது சிறுவன்??
பகிர்:


கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், 14 வயது சிறுவன் மீது டீசலை ஊற்றி தீவைத்துக் கொலை செய்ததாக 7 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை அந்தச் சிறுவனை கைது செய்யப்படாமல், அவனது பெற்றோருடன்தான் இருக்கிறார். இந்த வழக்கில் காவல்துறையினர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைப் பெறக் காத்திருக்கிறது. மேலும், சிறுவனின் உண்மையான வயதைக் கண்டறியும் சோதனை நடத்தவும் அனுமதி கோரியுள்ளது.

60 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கடந்த புதன்கிழமை பலியானார். அந்த சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், கடந்த மே 13ஆம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயது சிறுவன் தன் மீது டீசலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறியுள்ளார். 

உத்யோக் நகர் பகுதியில் நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது எங்களுக்குள் சண்டை வந்தது. அப்போது, பயங்கரமாக திட்டிக் கொண்டோம். இதையடுத்து ஆத்திரத்தில் ஒரு பாட்டில் டீசலை எடுத்து வந்து என் மீது ஊற்றி அவன் தீ வைத்தான் என்று 14 வயது சிறுவன் சாகும் முன் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னதாக, 7 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 14 வயது சிறுவன் பலியானதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.