இந்தியா

தில்லி தீ விபத்து: தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை

DIN

தில்லியின் கோகுல்புரி நகரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

தில்லி தீயணைப்பு சேவைகளின் தலைவர் அதுல் கர்க்  கூறுகையில்,  எரிந்த 7 உடல்களை மீட்டுள்ளதாகவும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது தீ விபத்து நடந்ததாக தெரிகிறது. மேலும் தீ மிக வேகமாக பரவியதால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என்று கூறினார்.

60 குடிசைகள் எரிந்துள்ளது. தீ விபத்துக்கான காரணங்களை இன்னும் அறியப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கோகுல்புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 குடிசைகள் எரிந்து நாசமானதாகவும், 7 பேர் பலியானதாகவும் தில்லி காவல் துறையினர் இன்று காலை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக  தில்லி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT