ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரெய்னவாரி பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா/டி.ஆர்.எப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இரு பயங்கரவாதிகளும் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்றும் காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.