இந்தியா

கேரளத்தில் ஆளும் அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

ஆளும் இடதுசாரிக்கு எதிராக காங்கிரஸ்  கேரளம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

DIN

ஆளும் இடதுசாரிக்கு எதிராக காங்கிரஸ்  கேரளம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பினராயி விஜயன் தலைமையிலான அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருவதாகவும், அரசின் நிர்வாகம் செயலிழந்துவிட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

காங்கிரஸைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கேரளம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாக செல்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கியும் இந்தப் பேரணி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசிற்கு எதிரான போராட்டம் குறித்து கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியதாவது: மக்கள் விலைவாசி உயர்வின் விளைவுகளை சந்தித்து வருகின்றனர். அதிகாரிகள் மக்களை கண்டுகொள்ளவில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாநிலத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT