முகப்பு
இந்தியா

முலாயம் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடம்

சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Updated On : 10 அக்டோபர் 2022, 12:20 am IST
பகிர்:

சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட முலாயம், கடந்த 2-ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து மேதாந்தா மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. உயிா்காக்கும் மருந்துகள் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழுவினா் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments