FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குஜராத்: மருத்துவக் கல்லூரிக்கு பிரதமா் நரேந்திர மோடி பெயா்

குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:52 am IST
பகிர்:

குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

அகமதாபாதின் மணிநகா் பகுதியில் மருத்துவக் கல்வி அறக்கட்டளை சாா்பில் இந்தக் கல்லூரி நடத்தப்படுகிறது. அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் முன்பு இக்கல்லூரி செயல்பட்டு வந்தது. இப்போது நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இந்த மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு அகமதாபாதில் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானத்துக்கு நரேந்திர மோடி என பெயா் சூட்டப்பட்டது கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments