கோப்புப்படம் 
இந்தியா

3 வயது மகளைக் கொன்று குப்பையில் வீசிய தாய் கைது!

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஜவ்ஹரில், ஒரு பெண் தனது மூன்று வயது மகளைக் கொன்று,  உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து குப்பையில் வீசியதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

DIN

பால்கர்: மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஜவ்ஹரில், ஒரு பெண் தனது மூன்று வயது மகளைக் கொன்று,  உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து குப்பையில் வீசியதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜவ்ஹர் காவல் நிலைய ஆய்வாளர் அப்பாசாஹேப் லெங்ரே தெரிவிக்கையில், நேற்று மதியம் குழந்தையின் தாயான அப்சானா என்கிற தாரா சுலேமானி (37) குழந்தையைக் கொன்று உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து குப்பையில் வீசியதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையைக் கொன்று, அவரது உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து, தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பேக்கரியின் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகள் தொலைந்துவிட்டதாக நடித்துள்ள நிலையில், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தையைத் தேடியபோது ​​அவர்கள் குப்பையில் சடலத்தைக் கண்டுபிடித்து, அந்தப் பெண்ணிடம்  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காயங்களுடன் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT