கோப்புப்படம் 
இந்தியா

காங். தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. 

DIN

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் நடைபெறும். 

இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று(செப். 24) தொடங்கவுள்ளது. செப். 30 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு மீதான பரிசீலனை அக். 1 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற அக். 8  கடைசி நாள்.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். 

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோரும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT