மேற்கு வங்கம்: மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலி
மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலியானார்கள்.
மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலியானார்கள்.
மேற்கு வங்க மாநிலம் சிதல்குசி பகுதியைச் சேர்ந்த 26 பேர் வேனில் ஜல்பேஷ் நோக்கி நள்ளிரவு புறப்பட்டனர். இவர்களுடைய வேன் மேக்லிகஞ்ச் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க- பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணி: தோ்வு பெற்றவா்கள் பட்டியல் டிஆர்பி வெளியீடு
Advertisement
Advertisement
இந்நிகழ்வையடுத்து வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடுவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் லேசான காயமடைந்தவர்களை மீட்டு ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வேனையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேனின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரில்(டிஜே சிஸ்டம்) ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.