தில்லி மாநகராட்சி தேர்தல்: 4 மணி வரை 45% வாக்குப்பதிவு
250 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
தில்லி மாநகராட்சி தேர்தல் மாலை 4 மணி நிலவரப்படி 45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
250 வார்டுகளின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு வாக்களிக்கவும் 13,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
படிக்க | ராஜஸ்தான்: தலைமைக் காவலரை தாக்கியதாக பாஜக முன்னாள் எம்பி மீது வழக்குப்பதிவு
Advertisement
Advertisement
தில்லி மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்தத் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
தில்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.