விபின் ராவத்துக்கு பத்ம விபூஷண், குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண்: பத்ம விருதுகள் அறிவிப்பு
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
4 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | பாஜகவில் இணைந்த ஆர்பிஎன் சிங் யார்? காங்கிரஸிலிருந்து விலகியது ஏன்?
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் பட்டியல்: முழு விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.