சிகிச்சையில் லாலு பிரசாத்: நேரில் நலம் விசாரித்த நிதீஷ் குமார்
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்லாலு பிரசாத் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிகார் தலைநகர் பாட்னவில் உள்ள பாரஸ் மருத்துவமனைக்கு ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமார் நேரில் சென்று லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்.
பின்னர் மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
Advertisement
Advertisement
கடந்த 3-ஆம் தேதி பாட்னாவில் உள்ள வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் அவரது லாலு பிரசாத் யாதவுக்கு தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு, முதுகில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
யாதவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால் அவரை சிகிச்சைக்காக தில்லிக்கு மாற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.