FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் காந்தி சிலை சேதம்

மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 30 அக்டோபர் 2022, 5:08 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்தில் உள்ளது ராணா மொஹல்லா எனும் கிராமம். இக்கிராமத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 2000ஆம் ஆண்டில் கிராம பஞ்சாயத்தால் நிறுவப்பட்டது. இந்த சிலையை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்திள்ளனர். இதனைக் கண்ட அக்கிராமத்தினர் ஜாவர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்த்வா மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிராம சர்பஞ்ச் குன்வர்ஜி கூறியதாவது: நேற்றிரவு சிலர் மகாத்மா காந்தி சிலையின் தலையை உடைத்துள்ளனர். 

Advertisement

Advertisement

இந்த வழக்கு உள்ளூர் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஜாவர் காவல் நிலைய அதிகாரி சிவராம் ஜாட் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில், கிராம பஞ்சாயத்து புகாரின் பேரில், ஜாவர் காவல் நிலையத்தில் 3 மற்றும் 427 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments