இந்தியா

இப்படி ஒரு ஆகஸ்ட் மாதத்தை சந்தித்ததே இல்லையாம்!

DIN


புது தில்லி: நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 30 சதவீதம் குறைவாகப் பெய்திருப்பதோடு, இதுவரை சந்திக்காத ஒரு ஆகஸ்ட் மாதமாக இது அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பருவமழை மற்றும் வெப்பநாள்களை புரட்டிப் போட்டு வெகுவாக பருவகாலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது எல் நினோ. இதனால், கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான, வறட்சியாக ஆகஸ்ட் மாதமாக நாம் கடந்து செல்லவிருக்கும் ஆகஸ்ட் மாதம் அமைந்துவிட்டது.

இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய வழக்கமான மழை அளவில் 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 20 நாள்கள் தான் மழை பெய்திருக்கிறது, மற்ற நாள்களில் மழை பிரேக் எடுத்துக் கொண்டதால், ஜூன் - செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மிகக் குறைவான மழையே பதிவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மாதம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு நாள்தான் பாக்கியிருக்கும் நிலையில், வழக்கமாக இந்த மாதத்தில் 241 மி.மீ. மழை பெய்ய வேண்டியது, ஆனால் 160.3 மி.மீ. மழைதான் பதிவாகியிருக்கிறது. இது 33 சதவிகிதம் குறைவாகும்.

இதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 191.2 மி.மீ. மழை பெய்தது. இது 25 சதவீதம் குறைவு. இதுதான் வழக்கமான அளவை விடக் குறைவாக பதிவாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் வகையில் தற்போது பருவமழை அதிக நாள்கள் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 30 சதவீதம் அளவுக்கும் மேல் மழை குறைவாகப் பெய்திருப்பது இதுவே முதல் முறை.

பருவமழை தொடர்ந்து குறைந்து வருவது, நாட்டின் வறட்சி நிலையை அபாயத்தில் தள்ளும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பல இடங்களில் மண் சரிவு

நீங்கள் என்னை அவதூறு செய்யலாம், என் மக்களை அல்ல: அமித்ஷாவிற்கு முதல்வா் கேஜரிவால் பதிலடி

கனமழை: தோட்டக்கலைப் பயிா்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள்

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு: 4 நாள்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT