காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது பாஜவின் பிரித்தாளும் கொள்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, “தேசிய குற்றவியல் பதிவுகள் அமைப்பின் அறிக்கை புள்ளிவிபரங்களை மட்டும் காட்டவில்லை, பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வு பாதுகாப்பின்றி இருப்பதையும் காட்டுகிறது. அநீதி, கொடுமைகள் மற்றும் அடக்குமுறை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்துவந்த சதித் திட்ட கொள்கையினால் ஏற்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தலித் மற்றும் பழங்குடியின மக்கள் பாஜக- ஆர்எஸ்எஸ் கட்சிகளின் அடக்குமுறையைத் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: என்னை 'மோடி' என்று அழையுங்கள், 'மோடி ஜி' வேண்டாம்!
கார்கே பகிர்ந்துள்ள பதிவில், 2013-க்குப் பிறகு தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 46.11 சதவீத அளவிற்கும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 48.15 சதவீதம் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.