இந்தியா

கேரள ஆளுநருக்கு எதிரான தாக்குதலுக்கு காவல்துறை உடந்தை?

DIN

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் வாகனங்களை கடந்த திங்கள் கிழமை இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (SFI) தடுத்து நடத்திய போராட்டத்திற்கு காவல்துறையினர் உடந்தையாக இருந்துள்ளனர் என ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த இடத்திற்கு போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களில் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஆளுநர் ஆரிப், இந்தத் தாக்குதலுக்குப் பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று நாள்களுக்கு முன் முதல்வர் பேசிய கருத்துக்களால் எஸ்எப்ஐ அமைப்பினர் தூண்டிவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

'கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருப்பதால் கேரளா கம்யூனிஸ மாநிலமாக மாறிவிடாது. கம்யூனிஸ்ட்டுகள் ஆள்வதால் கேரளா சர்வாதிகார மாநிலமாக மாறிவிடாது' எனக் கூறியுள்ளார் ஆளுநர் ஆரிப் முகமது. 

மேலும், மத்திய அமைச்சர் வி.முரளிதரன்,  “ஆளுநரின் பயணத்திட்டங்கள் குறித்த தகவல்களைக் காவல்துறையினர்தான் எஸ்எப்ஐ அமைப்பினருக்குத் தெரிவித்திருக்க வேண்டும்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, ஆளுநரின் வாகனங்களை நிறுத்தாமல் கருப்புக்கொடி போராட்டம் தொடரும் என மாணவர் சங்கத்தின் தலைமை தெரிவித்துள்ளது. கல்வி வளாகங்களை காவி மயமாக்க முயலும் கேரள ஆளுநரின் முயற்சிகளை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேருக்கு துருக்கியில் சிகிச்சை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு தகவல் வழங்கும் இணையதளத்திலேயே வேலையில்லையா?

கத்திரி வெயிலுக்கு இடையே காஞ்சிபுரத்தில் பலத்த மழை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT