கோப்புப்படம் 
இந்தியா

2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி 

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜகவின் வாக்குறுதியைக் குறிப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். 

DIN


ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜகவின் வாக்குறுதியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நாட்டின் மிகவும் தீவிரமான பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை இருந்து வருகிறது. 2022 - 2023ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட வயதினருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம்  10 சதவீதமாக உள்ளது.

இந்த எண்ணிக்கை கிராமப்புறத்தில் 8.3 சதவீதமாகவும், நகர்ப்பகுதிகளில் 13.8 சதவீதமாகவும் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜக வாக்குறுதி என்ன ஆயிற்று” என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு, பல கோடி வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டதால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT