மும்பையில் பல இடங்களில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் நடக்கவிருப்பதாக மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மும்பையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மும்பையின் பொது இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதுவரை எந்த வெடிபொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பாஜகவின் பொய்கள் வலுவானவை: மல்லிகார்ஜூன் கார்கே
காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த டிசம்பர் 27 அன்று ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பாதுகாப்பு சோதனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.