இந்தியா

மேற்கு வங்கம்: கிராம கண்காட்சியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராம கண்காட்சியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். 

DIN


மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராம கண்காட்சியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். 

கொல்கத்தாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஜாய்நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பாந்த்ரா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. 

முதற்கட்ட விசாரணையில், பலூன் விற்பனையாளர் பலூன்களை பம்ப் செய்யபோது எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். 

சாஹின் மொல்லா (13), குதுபுதீன் மிஸ்திரி (35), அபிர் காசி (8) மற்றும் பலூன் விற்பனையாளர் முச்சிராம் மொண்டல் (35) ஆகியோர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் பருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகென்றால் அமைரா தஸ்தூர்!

கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப்படம்!

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

வரலாற்றில் முதல்முறை..! ஆஸி. அணியில் இடம்பிடித்த பூர்வகுடி வீரர்கள்!

வின்டேஜ்... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT