முகப்பு
இந்தியா

உணவகத்தில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூரில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட 27 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 17 ஜனவரி 2023, 9:17 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கொச்சி: எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூரில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட 27 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு நச்சு அறிகுறிகளுடன் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

அசுத்தமான உணவை விற்கும் உணவகங்களுக்கு எதிராக மாநில அரசு பிரச்சாரத்தை தொடங்கிய சில நாள்களில் இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் உணவகத்தை மூடியுள்ளனர்.

சமீபத்தில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் செவிலியர் அங்குள்ள உணவகத்தில் உணவை சாப்பிட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.